×

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை, நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துவது மற்றும் சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Govt ,government ,schools , Government, Government Aided School, Students, Shoes, Socks, Tamil Nadu Government
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்