6,000 கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பிரேசில் பெண்

பிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை கொண்டு வீடு ஒன்றை கட்டியுள்ளார். சா பாலோ மாகாணம், இடாவ்காவை சேர்ந்த இவோன் மார்டின் என்பவர், சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டுள்ளார். இதையடுத்து அதை சேகரித்து வந்து சிமெண்ட் பூச்சுடன் வீடு கட்டியுள்ளார்.

3 மீட்டர் உயரம், 9 மீட்டர் அகலம், 8 மீட்டர் நீளம் கொண்ட வீட்டில், படுக்கையறை, சமையலறை, கழிவறையும் உள்ளன. மிக குறைந்த செலவிலேயே வீட்டை கட்டியதாகவும், வீடு கட்ட பாட்டில்களை பயன்படுத்தியதால் சுற்றுச்சூழல் கெடுவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

Related Stories: