புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிகமாக அபராதங்கள் விதிப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

டெல்லி : புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி நாட்டிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக அபராதங்கள் விதிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில்  அளித்துள்ளார்.இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களை கடுமையாக கண்காணிக்கும் வகையில் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு இ-செல்லான் மூலம் அபராதம் அனுப்பப்படும்.

மக்களவையில் மத்திய அரசுக்கு கேள்வி

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. இந்நிலையில் 4வது நாள் கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் என்பவர் மக்களவையில் மத்திய அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.அதாவது, புதிய  மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு எவ்வளவு கோடி ரூபாய் அபராதம் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது? அதனால் அரசுக்கு வரப்பட்டுள்ள வருவாய் எவ்வளவு ? எவ்வளவு செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

நிதின் கட்கரி பதில்

இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அபராத செல்லான்கள் தொடர்பான தரவுகளை வழங்கி இருக்கிறார். அந்த தரவுகளின் படி, தமிழகத்தில் மொத்தம் 14,13,996 அபராத செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக உத்திரப் பிரதேசத்தில் ரூ.9,83,326 அபராத செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக தலைநகரான டெல்லியில் மொத்தம் 4,81,328 அபராத செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அபராத தொகையை பொறுத்தவரை தமிழகம் மிக குறைவாக தான் உள்ளது. உத்திரப் பிரதேசம், குஜராத், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதில் முன்னணியில் உள்ளனர். ஆனால் அபராத செல்லான்கள் பொறுத்தவரை தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் விதிக்கப்பட்ட அபராத செல்லான்கள் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 27,75, 81,250 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: