×

வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ,வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சென்னை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். 2 நாட்களுக்கு பிறகு மழை குறையும் என கூறினார். மேலும் 28-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.


Tags : rainfall ,districts , Mild ,moderate rainfall,coastal districts,heatwave,Meteorological Survey
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை