×

14 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் வருகிற 25ம் தேதிக்கு பதிலாக 27ம் தேதி விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 25ம் தேதிக்கு பதில் வரும் 27ம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில்,  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இதனிடையே இதற்கான கவுண்ட்டவுன் வரும் 25-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் சிறப்பம்சங்கள்

*பி.எஸ்.எல்.வி.சி-47  ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

*பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ் எல் வகையில் 21-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

*அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறும் என கூறப்படுகிறது.

*பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது என கூறப்பட்டு்ளளது.

*இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

*இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


Tags : announcement ,ISRO , BSLVC-47, Rocket, Highlights, Satellite, Sriharikota, Nano
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...