நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவில் சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாகூர் சேர்ப்பு: எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு

டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாஜகவின் பெண் எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, சரத்  பவார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சாத்வி பிரக்யா சிங் தாகூரை இந்த குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவரை  சேர்க்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் சர்ச்கைக்கு பெயர் போனவர். கழிவறையை சுத்தம் செய்ய தான் எம்.பி ஆகவில்லை என பொதுக்கூட்டத்தில் பேசிவர். காந்தியைக் கொன்ற  கோட்சேவை தேசபக்தர் என்று வர்ணித்தவரும் ஆவார். இந்த கருத்தை தெரிவித்த சாத்வி பிரக்யா சிங் தாகூரை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் அப்போது, பிரதமர் மோடியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மும்பை தாக்குதலில் வீரமரணமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்க்காரே தன்னுடைய சாபத்தினால் உயிரிழந்தார் என்றும் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட  குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஆவார். தற்போது, இவரை பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: