திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வடதின்னலூர் கல்யாண ஈஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வடதின்னலூர் கல்யாண ஈஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  மேலும் செயரில் பாதாள விநாயகர் மற்றும் சீனிவாச பெருமாள் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு கோயிகளில் கொள்ளை சம்பவம் நிறைவேறியது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். சிலைகளின் மதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதுவும் பொருத்தப்படவில்லை. கொள்ளை அடிக்கப்பட்ட சிலை மிகவும் பழமை வாய்ந்த சிலை என ஊர்மக்கள் தெரிவிக்கினறனர். பிரதோஷ நாட்களில் மட்டும் தான் இச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படும் எனவும் கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>