குழந்தைகள் அதிகளவு தண்ணீர் அருந்த 4 முறை வாட்டர் பெல் முறை: புதுச்சேரி ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் அதிகளவு தண்ணீர் அருந்த வசதியாக 4 முறை வாட்டர் பெல் அடிக்கும் முறையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகளில் குழந்தைகள் போதியளவு தண்ணீரை அருந்தாமல் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 4 முறை வாட்டர் பெல் அடிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகள் நல ஆணையத்தின் பரிந்துரைபடி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வேலை நேரத்தினை பின்பற்றவும், சிறப்பு வகுப்புகளை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: