சென்னை விமான நிலையத்தில் 6 மாத குழந்தை பலி: ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தபோது நடந்த சோகம்...போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் சக்திமுருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து சக்திமுருகன் மனைவி கீதா, தாய் பிரிட்டோ குயின், 6 மாத ஆண் குழந்தை ரித்திக் ஆகியோர் கோலாம்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் இன்று 12.45 அளவில் வந்து இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்து, உடமைகளை எடுக்கும்போது குழந்தை சுயநினைவு இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதித்ததில் குழந்தை 2 மணி நேரத்திற்கு முன்பாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையின் சடலம் பிரேச பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

6 மாத குழந்தை விமானத்தில் வரும்போது, உயிரிழந்ததா? ,இல்லை முன்னதான ஏதேனும் குறைபாடு இருந்ததா? என்பது குறித்து சென்னை விமான நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>