பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. சட்டநெறிமுறைகளுக்கு முரணாக நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பது சரியல்ல என்று இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு  சார்பாக நவம்பர் 21ம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன், எம்பி திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட பல கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

Related Stories: