ராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக பச்சிளம் குழந்தை வாரவிழா

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில்  உலக பச்சிளம் குழந்தை வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. மருத்துவ நிலைய கண்காணிப்பாளர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தி மலர், நிலைய மருத்துவ அலுவலர்கள் ரமேஷ், அனிதா உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை எப்படி வளர்ப்பது என்பதை மருத்துவர்கள் எடுத்து கூறினர். பச்சிளங்குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது தாய்ப்பால் ஊட்டுதல் என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை.

குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு முதல் 28 நாள் வளர்ச்சியே காரணம் என்பது குறித்து கூறினர். மேலும் ஒவ்வொரு தாய்மார்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது, குழந்தைகளுக்கு எதை விரும்பி உண்ணுகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், தாய்மார்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: