×

குடும்ப தகராறில் விபரீதம் தாய்மாமனை கல்லால் சரமாரி அடித்து கொன்ற வாலிபர் கைது: ஆலந்தூரில் கொடூரம்

ஆலந்தூர்: ஆலந்தூரில் தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்து தாய்மாமனை கருங்கற்களால் சரமாரியாக அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூர், ஆசர்கானா தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் கோகுல்ராஜ் (31). ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் பார்சல் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது தாய்மாமன் எத்திராஜ் (எ) அப்புன் (60). நேற்று முன்தினம், எத்திராஜ் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீடு திரும்பி, தனது சகோதரி சரஸ்வதி மற்றும் கோகுல்ராஜிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை கோகுல்ராஜ் தட்டி கேட்கவே, எத்திராஜ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.இதில், ஆத்திரமான கோகுல்ராஜ், எத்திராஜை வீட்டிலிருந்து வெளியே தள்ளினார். தொடர்ந்து எத்திராஜ் சரமாரியாக கோகுல்ராஜ் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் மேலும், ஆத்திரமடைந்த கோகுல்ராஜ் அங்கிருந்த கருங்கற்களை எடுத்து எத்திராஜ் மீது சரமாரியாக தாக்கினார். இதில், எத்திராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எத்திராஜின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்ப முயன்ற கோகுல்ராஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை கொலை: மகன் கைது
கோயம்பேடு நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (72). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகன் பாலாஜி (45). கட்டிட மேஸ்திரி. குடிப்பழக்கம் உடையவர். தினமும் பாலாஜி, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பாலாஜி வழக்கம்போல்  குடிபோதையில் வந்து தந்தையிடம் மது குடிக்க அவரது பென்ஷன் பணத்தைக் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலாஜி தனது தந்தையை சரமாரியாக அடித்து, உதைத்து, கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்படும் கொலுறு என்ற கருவியால் தாக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த முத்து மயங்கி விழுந்தார்.  இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கிக்கிடந்த முத்துவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார், முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பாலாஜியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Arrest ,family dispute ,murdering mother ,Stone ,Family Dispute Youth , Family dispute, motherman, youth arrested
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...