3 ரபேல் ஒப்படைப்பு

புதுடெல்லி: முந்தைய பாஜ ஆட்சியில், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.59,000 கோடிக்கு கொள்முதல் செய்ய கடந்த 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் ரபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரான்சில் பயிற்சி பெற்ற இந்திய விமானப்படை விமானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இதனை இயக்குவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அடுத்த 4 ரபேல் விமானங்கள் வரும் மார்ச் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: