×

ஆசிய இளைஞர் கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் போராடி தோற்றது இந்தியா

தாக்கா: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடைபெறும் இளைஞர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதியில், பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் (வங்கதேசம்) நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் இளைஞர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்தது. ஒமேர் யூசுப் 66, ஹைதர் அலி 43, கேப்டன் ரோகைல் நசீர் 35, சைப் பாதர் 47*, இம்ரான் ரபிக் 28 ரன் எடுத்தனர். இந்திய இளைஞர் அணி பந்துவீச்சில் ஷிவம் மாவி, சவுரவ் துபே, ஹ்ரித்திக் ஷோகீன் தலா 2, சித்தார்த் தேசாய் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய இளைஞர் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. சன்விர் சிங் அதிகபட்சமாக 76 ரன் விளாசினார். கேப்டன் பி.ஆர்.ஷரத் 47, அர்மான் ஜாபர் 46, சின்மய் சுடர் 28* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தான் இளைஞர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2வது அரை இறுதியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் மோதும் இறுதிப் போட்டி 23ம் தேதி நடைபெறும்.


Tags : India ,Pakistan , Asian Youth Cricket, Pakistan, India
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!