ஏர்டெல், ஜியோ, வோடபோன் மொபைல் அழைப்புகட்டணங்கள் உயர்கிறது

புதுடெல்லி: ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் மொபைல் அழைப்பு, டேட்டா கட்டணங்களை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.  தொலைத்தொடர்பு துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ஜியோ இலவச 4ஜி சேவையை அளித்த பிறகு, அதுவரை கோலோச்சி வந்த மொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டன.  இந்த நெருக்கடியில் இருந்து மீளும் வகையில், மொபைல் கட்டணங்களை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.  போட்டி கட்டணங்களால் மிக குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவையை வாடிக்கையாளர்கள் அனுபவித்து வந்தனர். இந்த நிலை டிசம்பருக்கு மேல் தொடராது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளதை விட 30 சதவீதம் முதல் 45 வரை உயர்த்தப்படலாம் என தொலைத்தொடர்பு துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: