×

திவால் நடவடிக்கைக்கு ஆயத்தம் டிஎச்எப்எல் -ஐ நிர்வகிக்க புதிய அதிகாரி நியமனம்: ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை: திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (டிஎச்எப்எல்) இந்த நிறுவனம் பொதுத்துறை வங்கிகளிடம் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, போலி நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான மோசடி புகார்கள் உள்ளன.  இந்நிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்த ரிசர்வ் வங்கி, இந்த நிறுவனத்தை நிர்வகிக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.சுப்பிரமணியகுமாரை ரிசர்வ் வங்கி நேற்று நியமித்தது. இதை தொடர்ந்து, இந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்த உள்ளது. புதிய திவால் சட்டத்தின்படி முதன்முதலாக டிஎச்எல்எல் திவால் நடவடிக்கைக்கு ஆளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Reserve Bank of India ,officer , Bankruptcy, DHFL, RBI
× RELATED பள்ளிகளில் பொறுப்பு அலுவலர் ஆய்வு