×

ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம் 5 மாநிலங்கள் கொந்தளிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்காமல் இருப்பதற்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் 5 மாநில நிதியமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் 14 சதவீதத்துக்கு கீழாக குறையும்போது, அதற்கான இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இதில் 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டிய இழப்பீடு தொகை 10 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு 1,500 கோடியும், கேரளாவுக்கு 1,600 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு 2,100 கோடியும், டெல்லிக்கு 2,355 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளதாக அந்த மாநில நிதியமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : States , GST Compensation, 5 States
× RELATED 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்...