×

பாகிஸ்தானில் ஒரு கிலோ 300 தங்கத்துக்கு நிகரானது தக்காளி மணப்பெண் சீதனமாக தரப்படுகிறது

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை கிண்டல் செய்யும் வகையில் மணப்பெண் ஒருவர் தக்காளிகளால் நகை அணிந்து கவனத்தை ஈர்த்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் இந்தியா மீது பாகிஸ்தான் பொருளாதார தடை விதித்தது. மேலும் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதியையும் பாகிஸ்தான்  தடை செய்தது. இதனால் அங்கு தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.  கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.300ஐ தாண்டியது. சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளியின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளியின் பயன்பாடு குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் வெங்காயத்தின் விலையும் கிலோ ₹90 முதல் ₹100 வரை விற்பனையாகின்றது.

இதனிடையே தக்காளிகளை திருடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் தக்காளி வைத்திருக்கும் குடோன்களுக்கு காவலாளிகளை சம்பளம் கொடுத்து நியமித்துள்ளதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை குறித்து கவனத்தை ஈர்க்கும் நோக்கத்திலும், அந்நாட்டு பொருளாதாரத்தை விமர்சிக்கும் வகையிலும் மணப்பெண் ஒருவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ளார். பெற்றோர் தாய்வீட்டு சீதனமாக 3 பெட்டி தக்காளிகளை வழங்கியுள்ளனர்.

கழுத்தில் தக்காளிகளால் ஆன மாலை, நெத்திசுட்டியாக தக்காளி, வளையல்களுக்கு பதிலாக தக்காளி வளையல், தக்காளி கம்மல் என தங்கத்துக்கு நிகராக தக்காளிகளால் அலங்கரித்திருந்தார். மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதுகுறித்து மணப்பெண் கூறுகையில், “தங்கம் விலை உயர்ந்த பொருளாகும். அதேபோல் தக்காளி மற்றும் பைன் கொட்டைகளும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு பெண்ணின் பெற்றோரால் தக்காளிகளை வாங்கி தருவதற்கு முடிந்தால் அவர்களால் அந்த பெண்ணுக்கு தங்கம், வைரத்தையும் வாங்கி தரும் சக்கி உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம்” என்றார்.

Tags : Pakistan ,tomato brides , Pakistan, 300 kg of gold, tomatoes, brides
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்