சித்தூர் அடுத்த வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

திருமலை: கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்றிரவு வரை நீடித்தது.ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கல்கி ஆசிரமத்தில் கடந்த மாதம்  ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ₹94 கோடி ரொக்கம், ₹24 கோடி வெளிநாட்டு டாலர்கள், மற்றும் ₹20 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கல்கி ஆசிரமத்தின் சார்பில்   வெளிநாடுகளில் ₹100 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் வருமான வரித்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து கல்கி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: