உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ, தேமுதிக தயாரா?: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால்

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:ரஜினி, கமல் ஒன்று சேர்ந்தாலும், அவர்களது ரசிகர்கள் சேர மாட்டார்கள். அவர்களுக்குள் பல பிரச்னைகள் உள்ளது. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், தமிழக மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிசயத்தில்தான் தலைவர்கள் வருவார்கள்.  அதிசயத்தில் வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை மக்கள் ஏற்றுக்கொண்டனர். பாட்ஷா காலத்தில் வராமல் ரஜினி காலதாமதம் செய்துவிட்டார். இனி அவர், அரசியலுக்கு வந்தால் சரிப்படாது. ரஜினி எடுக்கும் முடிவை பொறுத்திருந்து  பார்ப்போம். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, பாஜ, புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து நிற்க வேண்டும். இதன்மூலம் அவரவர் பலம் தெரிந்துவிடும். இல்லாவிட்டால் எங்களால்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என கூறுவார்கள். தனித்து  நின்றால் அவ்வாறு கூற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: