×

பிரித்வி 2 ஏவுகணை சோதனை

பாலசோர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை நேற்று சோதி த்து பார்க்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 650 கிமீ வரை சென்று தாக்கும் ஷாகீன் 1 ஏவுகணையை கடந்த 2 நாட்களுக்கு முன் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் நேற்று இரவு 7 மணிக்கு அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பிரித்வி 2 ஏவுகணையை ஏவி சோதனை செய்தது. 350 கிமீ தொலைவுள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் வாய்ந்த பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவின் பாலாசோர் கடற்பகுதியில் இருந்து நேற்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Prithvi 2 missile
× RELATED வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி...