கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் 7 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ெவளியுறவுத்துறை அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பான கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் அளித்த பதில்:  கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பிரதமர் மோடி 7 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் 9 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். பிரதமர் மோடி பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த காலக்கட்டத்தில் 3 வெளிநாட்டு பயணம் சென்றுள்ளார்.

 துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் 6 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 13 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.  மற்றொரு கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், ‘‘அமெரிக்காவில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு டெக்சாஸ் இந்தியா மன்றம் என்ற தன்னார்வ அமைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ெசய்திருந்தது. இதற்காக மத்திய அரசு எந்த செலவையும் செய்யவில்லை’’ என்றார்.

Related Stories: