×

வேலை செய்த வீட்டில் உணவில் மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் கொள்ளையடித்த நேபாள வாலிபர் பிடிபட்டார்

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலையை சேர்ந்தவர் சீனிவாசலு (54). இவர் சவுகார்பேட்டையில் ஆயில் புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த சுகென் (30) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்து சமையல் மற்றும் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் சுகென் திடீரென வேலையை விட்டு நின்று, தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பின்னர் சென்னை திரும்பி, நுங்கம்பாக்கத்தில் ஒரு சோபா கடையில் சுகென் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் சீனிவாசலு வீட்டுக்கு சுகென் வந்தார். அவரிடம், “எனக்கு வேலை கொடுங்கள்” என சுகென் கேட்டிருக்கிறார். இதையடுத்து அவரை சீனிவாசலு வேலைக்கு சேர்த்துக் கொண்டார். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் சுகென் நல்ல மதிப்பை பெற்று வந்தார். பின்னர் சீனிவாசலு குடும்பத்தினருக்கு சுகென் சமைத்து போட்டார்.

அப்போது விட்டில் இருந்த சீனிவாசலு மனைவி நந்தினிஸ்ரீ (50) மகள் யஸ்வந்தி (25), கார் டிரைவர் சக்திவேல் (35), வாட்ச்மேன் கிருஷ்ணா (45) என மொத்தம் ஐந்துபேர் அந்த உணவை சாப்பிட்ட ஒரு அரைமணி நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர்.
 இதையடுத்து அங்குள்ள பீரோவை திறந்து, ₹7 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகை மற்றும் ₹35 ஆயிரம் ரொக்கப் பணம், 2 விலை உயர்ந்த செல்போனை சுகென் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவானார்.  இதையடுத்து சீனிவாசலு குடும்பத்தினர் மயக்கத்திலிருந்து எழுந்தனர். அங்கு சுகென் காணாமல் போனதையும் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதை கண்டு சீனிவாசலு குடும்பத்தினர் திடுக்கிட்டனர். இப்புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். பின்னர் சுகென் கொள்ளையடித்த நகை பணத்துடன்.

நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து 7 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகைகள், 35 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் சீனிவாசலுவிடம் இருந்த நகை பணத்தை பல மாதங்களாக திட்டம் தீட்டியுள்ளான். அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மயக்கமடைய செய்து கொள்ளையடிக்க வேண்டும். அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நண்பர்களின் ஆலோசனையின் படி ஊமத்தாங்காயை அரைத்து உணவில் சேர்த்துள்ளான். அவன் எண்ணியபடி அனைவரும் மயங்கிடனர். திட்டம்மிட்டபடி கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags : Nepalese ,shaving robbery ,work home , Work, 15 shaving robbery, Nepali youth
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்