மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சென்னை: சென்னை தி.நகர் பெரியார் சாலையை ேசர்ந்தவர் ஜோதி (70). இவர், பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஓட்டலில் மூதாட்டி ஜோதி டிபன் வாங்குவது வழக்கம். அப்போது கோவையை சேர்ந்த ஓட்டர் ஊழியர் குமார் (50) என்பவர் பழக்கமானார். இதனால் மூதாட்டி தினமும் டிபன் வாங்கி கொடுத்தும் அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்துள்ளார். இதற்கிடையே குமார் சில நாட்களுக்கு முன்பு ஓட்டலில் இருந்து நின்று விட்டார்.  இதனால் செலவுக்கு பணம் இல்லாததால், தனக்கு அறிமுகமான ஜோதியிடம் ேநற்று முன்தினம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் ஜோதி கழுத்தில் அணிந்து இருந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் குமாரை பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு சம்பவம் குறித்து மூதாட்டி ஜோதி பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

Related Stories:

>