பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதுபள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஆலந்தூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த  16 வயது மாணவி சூளையில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சியாம்சுந்தர் (26) என்ற வாலிபர் அந்த மாணவி காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததும்  மாணவியை பழவந்தாங்கல் பி.வி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி  அந்த மாணவிதான் ஷியாம் சுந்தரை காதலிப்பதாகவும் எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என பொற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது தந்தை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து, மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஷியாம் சுந்தரும், மாணவியும்  அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அங்கு செல்ல இருந்த நிலையில் நேற்று   ஒரு வழக்கறிஞர் முன்னிலையில் 2 பேரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரையும்  பரங்கிமலை அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் மாணவியின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது  மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டு சென்றனர். இதனையடுத்து, மாணவியை மணப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர்  விடுதில் சேர்த்தனர் இதனிடையே மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்ற ஷியாம்சுந்தரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

„ கிழக்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (33). இவர் நேற்று மாம்பாக்கம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வேங்கைவாசல் வீரபத்ரன் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது சாலையைக் கடந்த சுமார்  75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில், பலத்த காயம் அடைந்த   மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சுரேஷை கைது செய்தனர்.

„ சென்னை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்ரப் (45). கானத்தூர் கிளை சாலையில் துணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த முகமது அஸ்ரப் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த 50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இவரது கடையின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ரவி 50 என்பவர் நடத்தி வருகிறார். அவரது கடையின் பூட்டை உடைத்து ₹ 5 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  இது குறித்து இவர்கள் காலத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: