கடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது; மக்களவையில் வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்களவையில் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களின் கைது என்பது சமீப காலங்களில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது. திமுகவின் மக்களவை உறுப்பினரான தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 5பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அது 2017-ம் ஆண்டு 10 ஆக உயர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் அதாவது 2018-ல் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படாத நிலையில் தற்போது இந்த ஆண்டு மட்டும் அதாவது நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை 2019-ம் ஆண்டில் 44 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெளியுறவுத்துறை  கூறியுள்ளது. அதே போல மீனவர்கள் காயம் அடையும் அளவிற்கு தாக்குதல் சம்பவமும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ஒன்று கூட இல்லை.

2016,2017 ஆண்டில் கூட மூன்று அல்லது இரண்டு தாக்குதல் சம்பவங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 14 சம்பவங்கள், அதிலும் மீனவர்கள் கடுமையாக காயம் அடையும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. மற்றோருபுரம் மீனவர்கள் கொலை செய்யும் சம்பவங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இரு நாட்டு மீனவர்களையும், முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அதாவது மத்திய அரசு, இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியும் மத்திய அரசு செய்து வருகிறது.

மேலும் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்ப்பதற்காக ஏராளமான கருவிகளையும், ஏராளமான வழிமுறைகளையும், மயிற்சிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே இலங்கை கடற்படை கூறியிருக்கிறது. அதாவது நாங்கள் மீனவர்களை கைது செய்தால் சில விசாரணைக்கு பிறகு அவர்களை விடுவித்து விடுவோம். ஆனால் படகுகளை ஒருபோதும் விடுவிக்க மாட்டோம். என இலங்கை அரசு திட்ட வட்டமாக கூறியது. இந்நிலையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுத்த கூடிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தற்போது புதிய அரசானது இலங்கையில் அமைந்துள்ளது.

தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இலங்கையில் இருக்கிறார். எனவே மீனவர்களை மீட்பதற்காகவும், கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது மூத்த எம்.[பி.க்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Related Stories: