மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: சென்னையிக் ஸ்டாலின் பேட்டி

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவி இடங்களை மக்கள் நேரடியாக தேந்தெடுக்காமல் அங்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேயர், நகராட்சி - பேரூராட்சி, தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் முடிவு கண்டிக்கத்தக்கது கூறினார். காலையில் மறைமுகத் தேர்தல் இருக்காது என்று ஓ.பி.எஸ். கூறிய நிலையில் மாலையில் அவசரக் சட்டம் பிறப்பித்துள்ளனர். மேயரை மக்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

ஆனால் ஓ.பி.எஸ் கூறியதற்கு மாறாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கபப்ட்டுள்ளது என தெரிவித்தார். மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது. திமுக., ஆட்சியில் அரசியல் சூழ்நிலை காரணமாக மறைமுகமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதனால் மறைமுகமாக தேர்தல் முறை மாற்றப்பட்டது எனவும் கூறினார்.

Related Stories:

>