×

பேச்சிப்பாறை-கோதையாறு சாலை சீரமைக்கப்படுமா?..கலெக்டரிடம் மனு

நாகர்கோவில்: பேச்சிப்பாறை - கோதையாறு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பழங்குடி பாரதம் அமைப்பினர் அதன் பொதுசெயலாளர் சவுந்தர்ராஜ் காணி தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
விளவங்கோடு தாலுகா கடையால் பேரூராட்சிக்கு உள்பட்ட பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை சுமார் 15 கி.மீ சாலையானது மலைவாழ் பழங்குடி மக்கள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள், மின்வாரிய பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் தினசரி வந்து செல்லும் சாலை ஆகும். இந்த சாலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் பராமரிப்பில் உள்ளதாகும். இந்த சாலை பராமரிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது இந்த சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே இந்த சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.

நூலகம் அமைக்க கோரிக்கை

தலக்குளம் பகுதி பொதுமக்கள் மூர்த்தி என்பவரது தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனு: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதி தலக்குளம் ஆகும். இங்கு மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ளது. இதில் மாணவ மாணவியர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊர் மத்தியில் ஒரு நூலக வசதி ஏற்படுத்திட வேண்டும். இது தொடர்பாக அரசு சார்பில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : road ,Petcharipparai-Gothayyar ,Collector ,Petchapparai-Gothayyar , Speaker, Gothayar, Collector, Petition
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...