கொட்டாம்பட்டி அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

மேலூர்: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டம் மூலம் வெ.புதூர் கிராமத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் மதுரைசாமி தலைமை வகித்தார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன், உதவி வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் கண்ணன், பிரியங்கா மற்றும் விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

பயிர் சாகுபடி செய்ய நிலம் தயாரித்தல், விதை தேர்வு, நீர் மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாட்டு மேலாண்மை, இயற்கை உரம் மேலாண்மை, அறுவடை, மகசூல் வரை நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளை குழுக்களாக பிரித்து அக்குழுக்களுக்கு நன்மை செய்யும் பூச்சி, தீமை செய்யும் பூச்சிகளின் பெயர்களை வைத்து அக்குழுக்களுக்கு தனித் தனியாக வண்ண தலைப் பாகை அணிந்து கடலை வயலில் விவசாயிகள் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்தனர். உழவர் நண்பர் கலைச் செல்வி சேவுகப் பெருமாள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Stories: