×

மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும், அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும், அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும் என தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரைகள் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தது. மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமூகமாக செயல்படும்.  அதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற இந்த மறைமுக தேர்தல் வழிவகுக்கும். மேயர், கவுன்சிலர்கள் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் மாநகர, நகர மன்றக்கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது.

Tags : elections ,Tamil Nadu , Indirect Election, Accountability, Government of Tamil Nadu, Interpretation
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த...