×

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இந்த நடைமுறையானது 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் நேரடியாக மேயர் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசுக்கு சில சிக்கல் வரும்.

மேலும் அரசியல் காரணங்களாக பாஜக 5 மேயர் இடங்களை கேட்பதன் காரணமாகவும், பல்வேறு நெருக்கடிகள் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை காரணமாக கொண்டு நேற்று அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதலானது வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பொதுவாக சட்டப்பேரவை நடைபெறாத காலங்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றால் அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஒப்புதல் பெறப்படும். இந்த ஒப்புதல் பெறப்பட்ட நகலானது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசர சட்டமானது பிறப்பிக்கப்படும்.

இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவி இடங்களை மக்கள் நேரடியாக தேந்தெடுக்காமல் அங்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டமானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இதுவரை 4 முறை நடைபெற்றிருக்கிறது. அதாவது 1996, 2001, 2006, மற்றும் 2011-ம் ஆண்டு இதில் 2006-ல் மட்டுமே மறைமுக தேர்தலானது நடைபெற்றது.

இந்த 2019-ம் ஆண்டு அதாவது இந்த மாதத்திற்குள் குறிப்பாக டி.13-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெருவிக்கப்பட்டிக்கக்கூடிய நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : government ,Tamil Nadu ,election ,Mayor ,elections , Mayor, indirect election, Tamil Nadu government
× RELATED பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி மனு : தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்