×

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் ?

மும்பை : மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி!!


மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதையடுத்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

எனினும் அங்கு ஆட்சியமைக்க சிவசேனா தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சோனியா காந்தி ஒப்புதல்


இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் கட்சியின் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை இன்று சந்தித்துப் பேசினர். இந்தச் சூழல் இன்று சிவசேனா கட்சியுடன் ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலேவின் இல்லத்தில் இறுதி கட்ட கூட்டணி விஷயங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Sonia Gandhi ,Maharashtra ,Congress ,Shiv Sena , Sonia Gandhi, Approval, Maharashtra, Congress, President, Government, Shiv Sena
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...