×

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மிதமான அளவில் பெய்து வருகிறது தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனிடையே இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

திருவள்ளூரில் மிதமான மழை;
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பாச்சூர், பூங்காநகர், ஈக்காடு, கங்களூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குளிர்ந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கனமழை;
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளைகேட், பொன்னேரிகரை, பூக்கடைசத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

கள்ளக்குறிச்சியில் பலத்த மழை;
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் பெய்து வரும் மழையால் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மதுரையில் மிதமான மழை:
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, moderate rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...