தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை தனது அரசாங்கம் அனுமதிக்காது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை தனது அரசாங்கம் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான மசோதா கடந்த ஜனவரி 8ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யாததால் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மத்திய பாஜ அரசு, தற்போது தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதா 2019ஐ விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா; இந்திய குடிமக்களின் பதிவு  (என்.ஆர்.சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.

யாரும், மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அனைவரையும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவின் கீழ் கொண்டுவருவது ஒரு செயல் ஆகும். மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என கூறினார். இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா  பானர்ஜி; வங்காளத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது. தனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்காது எனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என கூறினார்.

Related Stories: