×

புதிய அரசாங்கம் நெருக்கடி : இலங்கையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இலங்கையில் கடந்த முறை மைத்ரிபால சிறிசேனா அதிபராக இருந்தபோது, தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை பதவியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர்  ராஜபக்சேவை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்சேவின் நியமனம் செல்லாது என்று கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்தது.

இலங்கை அதிபர் தேர்தல்
:

இதனையடுத்து, இலங்கையில் அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில்  பல்வேறு  கட்சிகள்,  அமைப்புகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.  

இதையடுத்து, அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெறும் நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இந்நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில்  விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது.

ராஜபக்சே பேட்டி:

இதற்கிடையே, ராஜபக்சே தனது 74வது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட அதிபரும், அமைச்சர்களும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே, தேர்தல் மூலம் பொதுமக்கள்  அளித்த முடிவுக்கு மதிப்பளித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக பதவி விலக வேண்டும்,’’ என்றார்.

மீண்டும் பிரதமர் தேர்தல் ?

இந்நிலையில்,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார்.அதன்படி,ரணில் விக்கிரமசிங்கேவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்படும். அதன்பின் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கும். அதுவரை இடைக்கால அரசு பதவி ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : government crisis ,Ranil Wickremesinghe , Sri Lanka Prime Minister Ranil Wickremasinghe resigns, Gotabhaya Rajapaksa
× RELATED மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார...