நாடு முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு : எந்த மதத்தினரும் அஞ்சத் தேவையில்லை என உத்தரவாதம்

டெல்லி: இந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவெட்டுக்காக முதலில் அசாம் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அசாமில் எடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு முறை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு தற்போது திட்டமிட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது.இன்று மாநிலங்களைவையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து என்.ஆர்.சி. குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை நிகழ்த்தினார்.

தேசிய குடிமகள் கணக்கெடுப்பு

அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் தாம் இந்தியர் என்பதை குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று கருதப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என்றும் எடுத்துரைத்தார். மேலும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பை கண்டு இந்தியாவில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் உறுதியளித்தார்.

அமித்ஷா உரை

மேலும் மாநிலங்களவையில் அமித்ஷா கூறியதாவது, பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மத பாகுபாடு காரணமாக பாதிக்கப்பட்டு தஞ்சம் புகுந்த இந்து, புத்தமதத்தினர், சீக்கிய, சமண, பார்சி அகதிகள் நலன் கருதியே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அறிவுமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை என்பது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் எந்த ஒரு மதமும் குறிவைக்கப்படவில்லை. எந்த ஒரு மதத்தினரையும் தனிமைப்படுத்தவும் இல்லை. அனைத்து மதத்தினருக்கும் உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும்தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையானது இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும். அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாதவர்கள் அதற்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம். இதற்கான உதவிகளை அஸ்ஸாம் மாநில அரசு செய்து தரும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories: