தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்: திரையுலக பக்தியும், நல்ல பண்பும் கொண்டவர்.. அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்

சென்னை: தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்குமார் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நானும், ரஜினிகாந்தும் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏன் என்றால் கடந்த 44 ஆண்டுகளாக நாங்கள் இணைந்து தான் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியலில் இணைய வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக இணைவோம் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். இதனிடையே பேசிய நடிகர் ரஜினிகாந்த் மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என கூறினார். இவர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்; ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார். மேலும் பேசிய அவர்; தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் திரையுலக பக்தியும், நல்ல பண்பும் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

Tags : Ajith ,character ,Jayakumar , Actor Ajith and Minister Jayakumar
× RELATED அஜீத்துக்கு வில்லனாக பிரசன்னா ஆசை