அனந்தபூரில் 32 கொத்தடிமைகள்: ஆந்திரா தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அனந்தபூர்: அனந்தபூரில் 12 குழந்தைகள் உட்பட 32 கொத்தடிமைகளை உடனடியாக விடுவித்து அழைத்து வருமாறு தானே கவனமேற்கொண்ட மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அனந்தபூரில் உள்ள சாகர் செங்கற்சூளையில் இவர்கள் கொத்தடிமைகளாக மிகவும் துன்புறுத்தப்படுவதாக  தகவல் வெளியானது. இதனையடுத்து 12 சிறார்கள் உட்பட 32 பேரையும் விடுவிக்க மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர தலைமைச் செயலருக்கு அனுப்பிய நோட்டீஸில், இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் செங்கற்சூளை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தங்களுக்கு ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அனந்தபூர் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் இந்த செங்கற்சூளைக்கு வருகை தந்து சிறார்களை அரசு மருத்துவமனைக்கு இட்டுச் சென்று மருத்துவ சோதனை மற்றும் வயது ஆகியவற்றை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் கர்லாதின் வட்டாட்சியர் இதனை கொத்தடிமை என்று கூறுவதை மறுத்து ஒடிசாவில் தொழிலாளர்கள் இடைத்தரகர் ஒருவரிடமிருந்து ஒவ்வொருவரும் ரூ.35,000 தொகைப் பெற்றனர் என்றார். ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கொத்தடிமைகளை விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுதும் படிக்காத ஏழை மக்கள் வறுமையினால் வாழ்வாதாரத்திற்காக இடைத்தரகர்களின் வலையில் சிக்கவைக்கப்பட்டு இப்படியாக கொத்தடிமைகளாகி விடுகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுபவர்கள் இத்தனை என்றால் கண்டுபிடிக்கப்படமால் நாடு முழுதும் கடினமான வேலையில் சரியான உணவு, மருத்துவம் இன்றி கஷ்டப்படும் மீட்கப்படா கொத்தடிமைகள் எத்தனையோ என்று மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories:

>