×

வித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ள நெப்டியூனின் இரு நிலவுகள்: நாசா கண்டுபிடிப்பு.!

சூரிய குடும்பத்தின் ஒன்றான நெப்டியூன் கிரகம், மொத்தம் 14 நிலவுகளை கொண்டுள்ளது. அவை நெப்டியூனை சுற்றி வருவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த 14 நிலவுகளில் இரண்டு நிலவுகள், வித்தியாசமான சுற்றுப்பாதை இயக்கத்தை கொண்டுள்ளதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். கேள்விக்குள்ளாகி இருக்கும் நயாத் மற்றும் தலசா என்ற அந்த இரண்டு நிலவுகளும் 100 கிலோமீட்டர் (62 மைல்) அகலமுள்ளவை ஆகும். அவை நாசா ஆராய்ச்சியாளர்கள் தவிர்க்கும் நடனம்(dance of avoidance) என்று அழைக்கும் வகையில் அவற்றின் கிரகத்தை சுற்றி வருகின்றன.

தலசாவுடன் ஒப்பிடும்போது ​​நயாத்தின் சுற்றுப்பாதை சுமார் ஐந்து டிகிரிகள் சாய்ந்துள்ளது. எனவே அது அதன் நேரத்தின் பாதியை தலசாவுக்கு மேலேயும், பாதியை கீழேயும் வேறெந்த பதிவுகளிலும் இல்லாதது போல ஒரு இணைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலவிடுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேசிய நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் மெரினா ப்ரோசோவிக், இந்த தொடர்ச்சியான முறையை ஒரு அதிர்வு(resonance) என நாங்கள் குறிப்பிடுகிறோம். கிரகங்கள், சந்திரன்கள் மற்றும் சிறுகோள்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு வகையான நடனங்கள் உள்ளன. ஆனால் இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு சிறிய நிலவுகளின் சுற்றுப்பாதைகள் சுமார் 1,850 கிலோமீட்டர்(1,150 மைல்கள்) இடைவெளியில் மட்டுமே உள்ளன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று தவிர்த்துக்கொள்வதற்கு ஏற்ப சரியான நேரம் மற்றும் சுழற்சியில் பயணிக்கின்றன. நயாத் நெப்டியூனை சுற்றி வர 7 மணிநேரம் எடுக்கும் நிலையில், தலசா வெளிப்புற பாதையில் ஏழரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். நீங்கள் தலசாவில் இருந்தால், நயாத் ஒவ்வொரு நான்கு சுழற்சிகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே திரும்ப திரும்ப மேலேயும் கீழேயும் கடந்து செல்வதை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். ஏனெனில் நயாத் தனது அண்டை கிரகமான தலசாவை மீண்டும் மீண்டும் கடந்து செல்கிறது. இந்த சூழ்ச்சிகள் தான் சுற்றுப்பாதைகளை சீராக வைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



Tags : Neptune ,NASA ,Two Neptune's Moons , NASA,Neptune,Moons
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...