மிதக்கும் சொர்க்கம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

சொர்க்கத்தை பூமியில் கொண்டு வரும் சம்பவம் இது. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘யாட்  ஐலண்ட் டிசைன்’ என்ற நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் ‘ட்ராபிக்கல் ஐலேண்ட் பாரடைஸ்’ என்ற மெகா சொகுசுக் கப்பலைஉருவாக்கி வருகிறது. 90 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள இந்தக் கப்பலை கடலில் மிதக்கும் சொர்க்கம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

கப்பலின் மேல்தளத்தில்  சிறு சிறு குடில்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், மலைக்குன்றுகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள் என மக்களின் மனதைப் பரவசப்படுத்தும் அனைத்து அம்சங்களும் உள்ளன. இது போக ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான வசதியும் உண்டு. ஒரு தீவையே கப்பல் வடிவில் கொண்டு வந்து அசத்தியுள்ளார்கள்.

Related Stories: