விண்வெளியில் தயாராகும் பிஸ்கட்!

நன்றி குங்குமம்

விண்வெளிக்கு வீரர்கள், வீராங்கனைகளை அனுப்புவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது முதல் முறையாக ஓர் அடுப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் பிஸ்கட் தயாரிப்பதற்காக! கடந்த வாரம் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் இருந்து ஒரு விண்கலம் சர்வதேச விணவெளி மையத்துக்குச் சீறிப் பறந்தது. அந்த விண்கலம்தான் அடுப்பையும், பிஸ்கட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் ஏற்றிச்சென்றுள்ளது.

விண்வெளி வீரர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இந்த அடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக அதிக வெப்பம், புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பிஸ்கட் தயாரிக்கும்போது அதன் வடிவம் எப்படியிருக்கும் என்பதை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராயப்போகின்றனர். அத்துடன் விண்வெளியில் சமையல் செய்வதற்கான சூழலின் சாதக பாதகங்களையும் கணக்கிடுவது இதன் இன்னொரு நோக்கம். விண்வெளியில் பிஸ்கட் தயாரிக்கும் முதல் நிகழ்வு இதுதான்!

த.சக்திவேல்

Related Stories: