×

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் : மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து சாதனை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் அதிகரித்து 40,754-ல் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086-ல் வர்த்தகமாகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து கைமாறின.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றுக்கு இடையே, ஆசிய பங்குச்சந்தைகளை தொடர்ந்து புதன்கிழமை வர்த்தக நேர துவங்கியதும் இந்தியப் பங்கு சந்தைகளும் உயரத் தொடங்கின.ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வர்த்தகமானது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 80 புள்ளிகள் வரை அதிகரித்து 12 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. நிஃப்டியின் துறை சார்ந்த குறியீடுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கான குறியீடு அதிக லாபத்தை எட்டியுள்ளது.

Tags : Mumbai ,Bombay Stock Exchange ,Sensex , Mumbai Stock Exchange, Sensex, Points, Nifty, National Stock Exchange, Reliance Industries, Bharti Airtel, ICICI
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!