×

கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது வேன் மோதி பெண் உட்பட 3 பேர் பலி

சென்னை:  மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு ஒரு பெண், 3 வாலிபர்கள் ஒரே பைக்கில் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அருகே சாலையில் திரும்பியபோது, எதிரே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மினி வேன் ஒன்று பைக் மீது மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.  இந்த விபத்தில் பைக்கில் இருந்த பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றினர். விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : East coast, woman, 3 killed, accident
× RELATED அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு