மீனம்பாக்கம் மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது

ஆலந்தூர்: சேலத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் தனது தாய், தம்பி ஆகியோருடன்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காரில் வந்து கொண்டிருந்தனர். டிரைவர் சுந்தரமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென காரின் இன்ஜினில் இருந்து புகை வந்தது.உடனே காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் தீப்பிடித்த கார் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. தகவலறிந்து, மீனம்பாக்கம் போலீசார்,  தாம்பரம் தீயணைப்புபடை  வாகனங்களுடன் சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் காரணமாக, அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து  மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>