‘ஆலா’ குடித்தவர் பலி

சென்னை: மகனுடன் ஏற்பட்ட தகராறில் ‘ஆலா’ குடித்த தந்தை உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராகவன் (65). இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக ராகவனுக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ராகவன், குடிப்பழக்கம் உடையவர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மகனுடன் ராகவனுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராகவன், குடிபோதையில் வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தும் ஆலாவை எடுத்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>