×

சவாரி ஓட்டுவது போல் நடித்து ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: வடசென்னையில் சவாரி ஓட்டுவது போல் நடித்து, ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மறித்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த குள்ள ராஜா (28), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுதாகர் (27), மணலியை சேர்ந்த கருப்பு உதயா (24) என்பதும், அவர்கள் வந்த ஆட்டோவில் 5 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிந்தது. ஆட்டோவுடன் கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள், சவாரி ஓட்டுவது போல் நடித்து, வண்ணாரப்பேட்டை, பேசின் பிரிட்ஜ், புளியந்ேதாப்பு, வியாசர்பாடி, புதுவண்ணாரப்ேபட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்று வந்தது தெரிந்தது. செல்போனில் தொடர்புகொண்டு கஞ்சா கேட்பவர்களுக்கு நேரில் சென்று, கஞ்சாவை கொடுப்பதன் மூலம் கூடுதல் கட்டணமும் வசூலித்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அண்ணாநகர்: அமைந்தகரை பார்த்தசாரதி தெருவில் உள்ள ஒரு குடோனில் போதை பொருள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  போலீசார், நேற்று அந்த குடோனில் சோதனை செய்தபோது, அங்கு 4 லட்சம்  மதிப்புள்ள 200 கிலோ மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் மாவா அறைக்கும்  இயந்திரம் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், குடோனில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கைலாஷ்  (34), நிரஞ்சகுமார் (19), பாண்டியன் (31) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், சூளைமேட்டில்  தங்கி, அமைந்தகரையில் குடோனை வாடகைக்கு எடுத்து  மாவா தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Three arrested , selling cannabis
× RELATED ரயில் பாதையில் பதுக்கி வைத்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது