ஏர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்Z லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  

ஆனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நவாஸ் பெயர் இடம் பெற்றதால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல முடியவில்ைல. எனவே, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்,  ரூ.700 கோடியை பிணைத்தொகை செலுத்த அரசு நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஷெரீப் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் நிபந்தனைகளை நிராகரித்ததோடு, நவாஸ் ஷெரீப் 4 வாரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது. இதையடுத்து, மருத்துவ வசதிகள் கொண்ட விமானமான ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக ஷெரீப் நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்.

Related Stories: