நேரடி வரிகள் வாரியத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: வருமான வரித்துறையின் உயர்ந்த அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தனது பணிகள் மேம்படுத்த, வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவிகளில் துறையைச் சேர்ந்த இளம் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பம் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. வருவாய், நிறுவனங்களுக்கான வரி நிர்ணயம் உள்பட முக்கிய விஷயங்களில் முடிவு எடுகக்கூடிய பொறுப்பு இந்த வாரியத்திற்கு உண்டு. ்வ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு முதன்மை ஆணையர், வரிகள் அதிகாரிகள் அந்தஸ்துக்கு மேல்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவி இவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதாக துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டும் தகுதி உள்ளவர்களாக கருதப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். மத்திய நேரடி வரிகள் வாரியம், தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். இந்த உறுப்பினர்கள் மத்திய அரசின் துறையில் சிறப்பு செயலாளர்களாக இருந்தவர்கள் இந்த வாரியத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டனர்.

வருமான வரித்துறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ஒரு முதன்மை தலைமை ஆணையர் வீதம் மொத்தம் 26 பேர் பதவி வகிக்கின்றனர். இவர்கள், வரிகள் வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் உள்ளனர். அடுத்தபடியாக முதன்மை ஆணையர்கள் உள்ளனர். இதுவரையில் வழக்கமாக, வருமான வரித்துறையில் பணியாற்றும் முதன்மை தலைமை ஆணையர்கள் மட்டும் வாரியத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவர். ஆனால், தற்போது மேலிருந்து மூன்றாவது அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளையும் நியமனம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்லது.  இதையடுத்து, சுமார் 300 இளம் அதிகாரிகள் வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர்.

Related Stories: