×

பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 11% உயர்வு

புதுடெல்லி: பயணிகள் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்ததைவிட இந்த அக்டோபரில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது மொத்தம் 2,48,036 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பான எப்ஏடிஏ செவ்வாயன்று தெரிவித்தது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகனம் மொத்தம் 2,23,498 விற்பனையானதாகவும் தெரிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் 5 சதவீதம்  அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 13,34,941 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 12,70,261 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், வர்த்தக வாகனங்களின் விற்பனை 23 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தம் 67,060 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 87,618 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில், கடந்த அக்டோபரில், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து மொத்தம் 59,573 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபரில் அனைத்து ரக வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து மொத்தம் 17,09,610 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 16,38,832 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்டோமொபைல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருநத்து. இதனால் தொழிலாளர் வேலையிழப்பையும் சந்தித்தனர். இந்நிலையில் பண்டிகை சீசனை முன்னிட்டு கடந்த அக்டோபரில் வாகனங்கள் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் டீலர்கள் நம்பிக்கையுடன் தொழிலை தொடர்ந்து நடத்துகின்றனர் என்று எப்ஏடிஏ அமைப்பின் தலைவர் ஆஷிஷ் ஹர்ஷ்ஹராஜ் காலே தெரிவித்துள்ளார்.

* பயணிகள் வாகனம் விற்பனை கடந்த 2018 அக்டோபரில் மொத்தம் 2,23,498 ஆக இருந்தது என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சஙகங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது..
* 2 சக்கர வாகனங்கள் விற்பனை கடந்த மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து மொத்தம் 13,34,941 ஆக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12,70,261 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Passenger vehicle sales , 11% in October
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...