×

ஏ டிவிஷன் ஹாக்கி: ரிசர்வ் வங்கி வெற்றி

சென்னை: ஏ டிவிஷன்  ஹாக்கி போட்டியில்  இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  6-0 என்ற கோல் கணக்கில் சேத்பட் யங்ஸ்டர்சை வீழ்த்தியது.
சென்னையில்  முன்னணி அணிகள் பங்கேற்கும் ஏ டிவிஷன் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஆர்பிஐ - சேத்பட் யங்ஸ்டர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே  ஆர்பிஐ அணி வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்தினர்.

அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல சேத்பட் வீரர்கள் தடுமாற, இதை பயன்படுத்தி ஆர்பிஐ வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆர்பிஐ அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின்  சவுந்தர் 3,  நடராஜன் 2, கவுசிக் ஒரு கோல் அடித்தனர். அடுத்து நடந்த 2வது லீக் போட்டியில் அடையாறு யங்ஸ்டர்ஸ் - அபிபுல்லா கிளப் அணிகள் மோதின. அதில் அபிபுல்லா கிளப்  2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின்  ஜோஷ்வா, ஜெர்ரி ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.  அடையாறு யங்ஸ்டர்ஸ் அணியின்  ராஜ்குமார் ஆறுதல் கோல் அடித்தார்.

Tags : A. Division ,Reserve Bank , A. Division hockey, Reserve Bank wins
× RELATED மீண்டும் கைவைக்கிறது மத்திய அரசு...